டெல்லியிலிருந்து சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் நோக்கி 37 பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் வந்த அலையன்ஸ் ஏர் விமானம், பிலாஸ்பூர் விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கும்போது திடீரென்று டயர் வெடித்தது. இதனால் விமானம் பயங்கர சப்தத்துடன் குலுங்கியபடி நின்றது. விமானத்தில் இருந்த பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி விட்டதோ என்று அச்சமடைந்து அலறினர். பின்னர் விமானத்தின் டயர்தான் வெடித்தது என்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதையடுத்து விமான நிலைய பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு விமானத்தில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு விமான நிலைய முனைய கட்டிடத்திற்கு அழைத்து வந்தனர். விமானத்தின் டயரை மாற்றி பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *