தஞ்சாவூர், ஆக- 29.
தஞ்சை மகர்நோ ன்புச்சாவடியை சேர்ந்தவர் கண்ணன், இவரது மனைவி சாலினி இவர்களுக்கு 3 வயதில் சாஸ்விகா என்ற பெண் குழந்தை உள்ளார். சாஸ்விகா தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார்.இந்த நிலையில் போதை ப்பொருட்களுக்கு எதிராக குழந்தை சாஸ்விகா ரோலர் ஸ்கேட்டிங் செய்து விழி ப்புணர்வு ஏற்படுத்தினார்.

தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே இருந்து தனது ரோலர் ஸ்கேட்டிங் விழிப்பு ணர்வை சாஸ்விகா தொடங்கினார். போதை பொருட்களுக்கு எதிராக ஸ்கேட்டிங் செய்தவாறே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மொத்தம் 3 கி.மீ தூரத்தை 4 நிமிடங்களில் ஸ்கேட்டிங் செய்து அசத்தினார்.

இந்த உலக சாதனை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தது. இதை யடுத்து சாதனை படைத்த சாஸ்விகாவிற்கு ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்த தற்கான சான்றிதழை அதன் நிறுவன தலைவர் வெங்கடேசன் வழங்கி பாராட்டினார். உலக சாதனை படைத்த சாஸ்விகாவை அவரது பயிற்சியாளர் மணிகண்டன் மற்றும் பலரும் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *