ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஆரா 2.0 (“AURA 2.0”) தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம்
ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம் ஆரா 2.0 (“AURA 2.0”) என்ற தலைப்பில் நடைபெற்றது.இந்நிகழ்வு ஆதித்யா குழுமங்களின் தலைவர் பொறியாளர் சுகுமாறன் , நிர்வாக அறங்காவலர்கள் பிரவீண்,ஸ்ரீநிதி பிரவீண் குமார், ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி இயக்குநர் ஜோசப் வி தனிக்கல்,முதல்வர் திருமலை,டீன் ராஜேந்திரன்,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்வேறு பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது தொழில்நுட்பத் திறன்கள், புதுமையான சிந்தனைகள் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக அக்ரிகேட் இண்டெலிஜென்ஸ் (Aggregate Intelligence) நிறுவனத்தின் மனித வள துறை மேலாளர் விக்னேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாணவர்கள் தங்களது கல்வியுடன் தொழில்துறை சார்ந்த திறன்களையும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதுமையான தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற திட்ட கண்காட்சியில் கல்லூரியின் அனைத்து துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று, 90-க்கும் மேற்பட்ட புதுமையான திட்டங்களை காட்சிப்படுத்தினர். இத்திட்டக் கண்காட்சியில் சுமார் 1,800 மாணவர்கள் பங்கேற்று, மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு, படைப்பாற்றல் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு பயனடைந்தனர்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய தொழில்நுட்பத் தீர்வுகள், செயல்முறை மாதிரிகள் மற்றும் புதுமையான திட்டங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
நிகழ்ச்சிகளை டாக்டர் மிஷ்மலா சுஷீத்,டாக்டர் ராதிகா , ஆகியோர் ஒருங்கிணைத்தனர்..,
இக்கருத்தரங்கின் வெற்றிகரமான நடத்தைக்கு அனைத்து துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான பங்களிப்பை வழங்கினர். துறைத் தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மாணவர்களின் முழுமையான ஒத்துழைப்பு ஆகியவை “AURA 2.0” கருத்தரங்கின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
மாணவர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துதல், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களைத் தயார்படுத்துதல் மற்றும் புதுமையான சிந்தனைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு “AURA 2.0” நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு மாணவர்களுக்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்கும், தங்களது புதுமையான திட்டங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் சிறந்த தளமாக அமைந்தது.