தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 9வது வார்டு எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44ஆம் ஆண்டு திருவிழா. இன்று மாலை ஜெபமாலையுடன் பொதுமக்கள் முன்னிலையில் கோலாகலமாக வானவேடிக்கையுடன் கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தினமும் மாலை ஜெபமாலை, பிரார்த்தனை நடைபெறும். இந்த திருவிழாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வார்கள்.

வருகிற 06-09-2026 தேதி சப்ரபவனியும், 07-09-2026 தேதி ஆசன விருந்தும் நடைபெறும்.

முக்கிய திருவிழாவானது வருகிற 08-09-2026 அன்று லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை அருள்திரு. செல்வன் பெர்னான்டோ அவர்கள் தலைமையில் ஆடம்பர திருவிழா கூட்டு திருப்பலி நடைபெறுகிறது.

விழா ஏற்பாட்டினை தங்கத்தேர் கெபி கமிட்டி, வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள், பூண்டி மாதா அன்பிய மக்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *