விழுப்பனங்குறிச்சியில் நடந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் சந்திப்பு இயக்கம் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் விழுப்பனங்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது கிளை செயலாளர் பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயற்குழு தோழர் துரைசாமி ஒன்றிய செயலாளர் சாமிதுரை கிளை உறுப்பினர்கள் தர்மராஜ் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

மெயின் ரோடு கிராம உட்பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் ஒவ்வொரு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கப்பட்டது விவசாயிகள் நீண்ட கோரிக்கையை வைத்து போராடி வருகிற குருவாடித்தளத்தில் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டி விவசாயிகளின் பாசன வசதி மேம்படுத்த வேண்டும் திருமானூர் ஒன்றியத்தில் கோவில் சத்திரம் மற்றும் மடங்களுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் இலவச வீட்டு மனை வழங்கிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *