கோவையில் சிந்தி லேடீஸ் ஃபோரம் சார்பாக நடைபெற்ற தீஜ் கொண்டாட்ட விழா-ரெட்ரோ டூ மெட்ரோ’ –என இளம் பெண்களுக்கு இணையாக வயதான பெண்களும் பேஷன் ஷோவில் அசத்தல்

தமிழகத்தில் வரலட்சுமி விரத பண்டிகையை பெண்கள் ஒன்று கூடி கொண்டாடுவது போல, சிந்தி சமூக பெண்களின் பாரம்பரிய சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் ‘தீஜ் 2026’ விழா கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உற்சாகமாக நடைபெற்றது.

கோவை சிந்தி லேடீஸ் ஃபோரம் தலைவர் பூஜா தலைமையில் நடைபெற்ற விழாவில், கோவை திருப்பூர், ஈரோடு, நீலகிரி , உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிந்தி சமூக பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

விழாவில் முக்கிய நிகழ்வாக, ரெட்ரோ டூ மெட்ரோ எனும் தலைப்பில் பேஷன் ஷோ நடைபெற்றது..

சிந்தி சமூக பாரம்பரிய கலாச்சாரத்தை போற்றும் வகையிலும், பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நடைபெற்ற இதில், இளம் பெண்களுக்கு இணையாக வயதான பெண்களும் உற்சாகத்துடன் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்தனர்.
பழங்கால ஆடை அலங்காரம், அணிகலன்கள் மற்றும் தோற்றத்தை வெளிப்படுத்திய ரெட்ரோ சுற்றும், இன்றைய நவீன பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் நவீனத்துவத்தை வெளிப்படுத்திய மெட்ரோ சுற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

வயது என்பது தன்னம்பிக்கைக்கும், திறமைக்கும் தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், பல்வேறு வயதினரும் ஒரே மேடையில் ஆர்வத்துடன் பங்கேற்றது விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது.

சிந்தி சமூகத்தில் தீஜ் பண்டிகை பெண்கள் ஒன்றிணைந்து பாரம்பரியத்தை போற்றுவதுடன், மகிழ்ச்சியையும் நட்பையும் பகிர்ந்து கொள்ளும் முக்கியமான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற ‘ரெட்ரோ டூ மெட்ரோ’ நிகழ்ச்சி பாரம்பரியத்தையும் நவீன வாழ்க்கை முறையையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்ததுள்ளதாகவும்,
, பாரம்பரியம், நட்பு, ஒற்றுமை மற்றும் பெண்களின் தன்னம்பிக்கையை கொண்டாடும் வகையில் இந்த சிந்தி தீஜ் விழா,நடைபெற்றதாக சிந்தி ஃபோரம் கோவை கிளை நிர்வாகிகள் தெரிவித்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *