எண்ணூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சரித்திரப்பதிவேடு குற்றவாளி தனது சகோதரர் மற்றும் நண்பருடன் எட்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்த எண்ணூர் போலீசார்

தொடர்ச்சியாக ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்களை பிடித்து கைது செய்து வரும் எண்ணூர் போலீசார்

எண்ணூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு செல்லும் சாலையில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து போது அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பின்னர் அவர்கள் மூன்று பேரை எண்ணூர் காவல் நிலையம் அழைத்து வந்த நிலையில்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ராமச்சந்திரா நகரை சேர்ந்த பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி அருள்ராஜ் 29 மற்றும் இவரது சகோதரர் ராஜா 26 மற்றும் எண்ணூர் வள்ளலார் நகரை சேர்த்த கார்த்திக் 19 ஆகிய மூவரை கைது செய்து அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்போன் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து மூவரையும் சிறையில் அடைத்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *