கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் வரத்து அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதல் அமைக்க வேண்டும் என கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா பேரவையில் வலியுறுத்தி பேசினார் .

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உணவுப் பொருள் வழங்கல் துறை தொடர்பான கேள்வி நேரத்தின் போது ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ பேசியது தேனி மாவட்டத்தில் கம்பம் உத்தமபாளையம் ராயப்பன்பட்டி ஆகிய பகுதிகளில் அரசின் நெல் கொள்முதல் நிலையங்களை அரசின் நிரந்தர கட்டிடங்களில் அமைக்க வேண்டும் பழுதடைந்த மற்றும் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் நீண்ட தொலைவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் சென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதில் கடும் சிரமம் ஏற்படுவதால் அவர்களை அருகில் உள்ள ரேஷன் கடைகளுடன் இணைக்க வேண்டும்.

மேலும் தோட்டத் தொழிலாளர்கள் ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் கம்பம் தொகுதியில் அவர்களின் வசதிக்காக ரேஷன் கடைகளின் விற்பனை நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் இவ்வாறு பேரவையில் எம் எல் ஏ வலியுறுத்தி பேசினார் இதற்கு பதில் அளித்த அமைச்சர் வெங்கட்ரமணன் பேசும்போது தேவையான இடங்களில் கூடுதல் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கவும் குடோன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் கூடுதல் ரேஷன் கடைகள் தேவைப்படும் பகுதிகளில் ஆய்வு செய்து தேவைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *