துறையூர் செப்-03
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 60 கிலோ கஞ்சாவை துறையூர் போலீசார் பறிமுதல் செய்து மதுரை சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்தனர்.நேற்று மாலை 7 மணியளவில் பெரம்பலூர் டூ துறையூர் சாலை வழியாக காரில் கஞ்சா கடத்தி வருவதாக துறையூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் துறையூர் டூ பெரம்பலூர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கீழகுன்னுப்பட்டி பிரிவு சாலை அருகே வேகமாக வந்த காரை நிறுத்த முயன்ற போது கார் நிற்காமல் வேகமாக சென்றது. உடனே போலீசார் லத்தியால் தாக்கி நிறுத்த முயன்றனர். நிற்காமல் சென்ற காரை போலீசார் சினிமா பாணியில் ஷேசிங் செய்து பிடித்து விசாரித்ததில்,காரை ஓட்டி வந்தது மதுரை கூடல் புதூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (30) என்பதும், ஒடிசா மாநிலம் பள்ளிகுடா பகுதியில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து காரையும்,காரில் இருந்த சுமார் 30 லட்சம் மதிப்புள்ள 60 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.தொடரந்து கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *