காரைக்கால்: காரைக்காலில் உள்ள டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 2026–27ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
செப்டம்பர் 8: காலை 10 மணி முதல் வணிகவியல், தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் மற்றும் வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும்.
செப்டம்பர் 9: கணினி அறிவியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், சமூகப்பணி, பொது நிர்வாகம் மற்றும் கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும்.
தகுதியான மாணவ, மாணவியர் உரிய ஆவணங்களுடன் கலந்தாய்வில் கலந்து கொண்டு, சேர்க்கை நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாணவர் சேர்க்கை தொடர்பான விரிவான தகவல்களுக்கு www.kmkpgskkl.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.