புதுச்சேரி, செப்.7

புதுச்சேரி மாநில தமிழ்நாடு நாடார் பேரவை புதிய நிரவாகிகள் அறிமுக விழா லாஸ்பேட்டை ஏர்போர்ட் ரோட்டில் உள்ள பொன்னியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் பேரவையின் மாநில தலைவராக ராமர் நாடார், பொதுச்செயலாளராக சாமி (எ) கருப்பசாமி நாடார். பொருளாளராக காமராஜ் நாடார், மகளிர் அணி தலைவியாக காயத்ரி, செயலாளராக காளீஸ்வரி, பொருளாளராக தாமரைச்செல்வி மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.

விழாவுக்குப்பின் என்.ஆர்.தனபாலன் நிருபர்களிடம் கூறும்போது, இந்திராகாந்தி சிலை முதல் ராஜீவ்காந்தி சிலை வரை கடுமையான போக்குவரத்து நெரிசலை போக்க மேம்பாலத்தை விரைந்து அமைத்து தர வேண்டும். கன்னியாகுமரி, நெல்லை, செங்கோட்டை பகுதிகளுக்கு புதுச்சேரியில் இருந்து நேரடியாக ரயில்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து 3 மாதங்களை கடந்த பிறகும், இன்னும் இப்போது தான் புதிதாக வந்தவர்கள் எனக்கூறி வருகிறார்கள்.

போராட்டங்களுக்கு தீர்வு காணவில்லை. புதிதாக வந்தவர்களாக இருந்தாலும் என்னென்ன வாக்குறுதிகளை கூறினார்களோ அதனை நிறைவேற்ற வேண்டும். ஆனால் இதுவரை எதுவும் செய்யவில்லை. கேஸ் தருவோம் என்றார்கள் தரவில்லை. தாலிக்கு தங்கம் தரவில்லை. கள் இறக்க அனுமதி கேட்டு தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். தவெக ஆட்சியில் நாடார்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது. 4 மிகப்பெரிய சமுதாயங்களில் நாடாரும் ஒன்று. ஆனால் அந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. கணக்கெடுப்பு நடத்தினால், யார், யார் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ப இடஒதுக்கீடு கேட்க முடியும் என்றார்.

மேலும் அவர் கூறியதாவது…
புதுச்சேரியில் வார இறுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி சிலை இடையே உயர் மட்ட மேம்பாலம் கட்டப்படும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்து மத்திய அமைச்சர் தலைமையில் அடிக்கல் நாட்டியும் கூட இன்னும் மேம்பாலம் சம்பந்தப்பட்ட வேலை நடக்கவில்லை. போர்க்கால நடவடிக்கையாக இந்திரா காந்தி ராஜீவ் காந்தி இடையே மேம்பாலம் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் 12 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது அதற்கு கால்வாசி கூடபனை மரங்கள் தற்போது இல்லை. அதனால் பதநீர் இறக்கினால் கூட பொய் வழக்கு போடுகிறார்கள். எனவே கள் உடலுக்கு நலம் தரும் பானம். ஆந்திரா ,கேரளா, கர்நாடகாவில் கள் இறக்க அரசு அனுமதி உள்ளது. எனவே கள்ளுக்கடை திறக்க வேண்டாம்.
கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். என்றார்.


விழாவில் மாநிலத் துணைத் தலைவர் பி லோகநாதன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் புழல் டாக்டர் ஏ தர்மராஜ், மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார், மாநில வழக்கறிஞர் அணி தலைவர் எஸ். ஜெயச்சந்திரன், மாநில ஒழுங்குமுறை கமிட்டி எஸ் எம் குருசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் எம் வைகுண்ட ராஜா, மாநில மகளிர் அணி தலைவி விக்டோரியா, விழுப்புரம் மாவட்ட தலைவர் எஸ். எஸ். செந்தில்குமார், ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலனுக்கு மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் பொதுச் செயலாளர் முருகானந்தம் மற்றும் சமூக சேவகர் முத்தியால்பேட்டை தொகுதி லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் அழகப்பன் சால்வை அணிவித்து வரவேற்றார். விழாவில் துணைச் செயலாளர் பாண்டியன் நெடுஞ்செழியன் நாடார், துணைச் செயலாளர் ரவிக்குமார் நாடார், மற்றும் நிர்வாகிகள், யுவராஜ் நாடார், செல்வராஜ் நாடார், மருது காசி நாடார், முருகன் நாடார், கௌரவத் தலைவர் குமார் நாடார், தங்கப்பிரகாசம் நாடார் மற்றும் பேரவை உறுப்பினர்கள் குடும்பத்தினருடன் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பாண்டியன் நெடுஞ்செழியன் நாடார் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *