S.முஹம்மது தாரிக் அன்வர்
செய்தியாளர், காரைக்கால்
காரைக்கால் மின்துறை உதவி பொறியாளர் (நகரம்-1) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
உயர் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை 03.06.2029 (வியாழக்கிழமை) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காரைக்கால் மாவட்டம் திருபட்டினத்தில் அமைந்துள்ள பிப்டிக் எஸ்டேட், போலகம், படுதார்கொல்லை, திட்டச்சேரி ரோடு மேற்கு, மேலையூர், நிரவி, மேலஓடுதுறை, காக்கமொழி, கீழமனை, ஊழியபத்து, தூதுபோனமூலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது