போடிநாயக்கனூர் கார்டமம் பிளான்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளான்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் கல்லூரி தேசிய மாணவர் படை என்சிசி தேனி மாவட்ட காசநோய் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு TB MUKT BHARAT ABIYAAN காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் லெப்டினன் கர்னல் அமிர்தராஜ் தேனி மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் ஏ ஆர் இராஜபிரகாஷ் பெரியகுளம் சுகாதார கல்வியாளர் எஸ் தர்மேந்திர கண்ணா ஆகியோர் பங்கேற்று கல்லூரி என் சி சி மற்றும் அனைத்து துறை மாணவ மாணவிகளுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு உரையை மாணவ மாணவிகளுக்கு புரியுமாறு விளக்கி பேசினார்கள்
மேலும் என்சிசி மாணவர்கள் காசநோய் இல்லா போடிநாயக்கனூர் என்ற உறுதி மொழியை உணர்வு பூர்வமாக எடுத்துக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவ மாணவிகள் கூறும் போது காசநோய் என்பது எவ்வளவு அபாயகரமானது அந்த நோயிலிருந்து எவ்வாறு விடுபட வேண்டும் அந்த நோய் வராமல் தடுக்க என்னென்ன வழிகள் உண்டு போன்ற பல்வேறு விழிப்புணர்வுகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு பெற்று பயனடைந்தோம் இதுபோன்ற உடல் சார்ந்த நோய்கள் சார்ந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகத்தினருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர் .
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் என்சிசி அதிகாரி லெப்டினன் முனைவர் எஸ் நாகலிங்கம் மாவட்ட பொது மற்றும் தனியார் ஒருங்கிணைப்பாளர் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். கல்லூரி கண்காணிப்பாளர் யுவராஜா நன்றி கூறினர்