கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கல்லூரி நிறுவன செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது

இளங்கலை மூன்றாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி எஸ் பவதாரணி அனைவரையும் வரவேற்று பேசினார் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் கல்லூரி முதல்வர் ஆகியோர் ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவித்து ஆசிரியர்கள் மாணவிகளுக்கு ஆற்றும் தன்னல மற்ற சேவைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்

இதனைத் தொடர்ந்து கல்லூரியின் மாணவர் பேரவை குழுவினர் சார்பாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது இதை யடுத்து கல்லூரி மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் கல்லூரியின் கணிதவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி ஏ.ஹலிமத் சாத்தியா நன்றி கூறினார் கல்லூரி பேரவை குழுவினர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *