​பொள்ளாச்சி: சர்வதேச யோகா விளையாட்டு கூட்டமைப்பு (International Yoga Sports Federation) சார்பில், இலங்கை கொழும்பில் உள்ள ஸ்ரீ ராம் திருமண மண்டபத்தில் ’37-வது அமெச்சூர் உலக யோகா கோப்பை 2026′ (37th Amateur World Yoga Cup 2026) யோகா போட்டி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. சர்வதேச யோகா கூட்டமைப்பு, ஆசிய யோகா கூட்டமைப்பு மற்றும் இலங்கை தேசிய யோகா சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்போட்டியில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.


​இவ்வேளையில், பொள்ளாச்சி கிரியேட்டிவ் சேம்ப்ஸ் பள்ளியைச் சேர்ந்த (Creative Champs School, Pollachi) 55 மாணவ-மாணவிகள் இச்சர்வதேச யோகா போட்டியில் கலந்துகொண்டு தங்களது திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்தி ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் வின்னர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இத்தகைய உலகளாவிய மேடையில் வெற்றி கண்ட மாணவர்களையும், அவர்களுக்குப் பயிற்சியளித்த ஆசிரியர்களையும் பள்ளித் தலைவர் திரு. முரளி கிருஷ்ணன் மற்றும் பள்ளியின் தாளாளர் திருமதி. மாலதி முரளி கிருஷ்ணன் ஆகியோர் நேரில் அழைத்துத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் தெரிவித்தனர். பள்ளி மாணவர்களின் இந்தச் சர்வதேச சாதனை அப்பகுதி மக்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *