கடலூர், செப். 3:
கடலூர் மாநகராட்சி, சாவடியில் அமைந்துள்ள வேளாண்மை விற்பனையாளர்கள் கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வெங்காயம் விற்பனை செய்யும் திட்டம் (03.09.2026) தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு வெங்காயம் விற்பனை செய்வதை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார், வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இளஞ்செல்வி, துணைப் பதிவாளர்கள் மயூரி, சுகந்தலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.