சின்னாளபட்டி:

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி கிளையின் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளர் .சந்தனக்குமார் தலைமை வகித்தார். விழாவையொட்டி குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். தொடர்ந்து, கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

இதையடுத்து, விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் சார்பில் இனிப்புகள் மற்றும் பள்ளிக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் அறக்கட்டளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *