மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான கால நிலை நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் தென்மேற்குப் பரு வமழை ஜூன் மாதம் முதல் செப் டம்பர் மாதம் வரை பெய்யும். நிகழாண்டு கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இதனால், தென் மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சூரியனின் குத்துக் கதிர் தமிழகத்தில் விழுந் ததால், பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பத்தின் தாக் கம் மேலும் அதிகரித்தது. இதே போல, மதுரை மாநகரப் பகுதி களில் கடந்த சில தினங்களாக பக லில் வெப்பம் அதிகமாக இருந்தா – லும், மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
ஓரிரு இடங்களில் சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில், வெப்பச் சலனம் காரணமாக மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்பட 5 பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
எனினும், மதுரை மாவட்டத் தில்வியாழக்கிழமை காலை முதல் வெப்பம் அதிகமாகக் காணப்பட் டது.
மாலை 5.30 மணியளவில் சாரலாக தொடங்கிய மழை, பிறகு பலத்த மழையாக பெய்தது.
மதுரை தல்லாகுளம், கோரிப்பாளையம், புதுநத்தம் சாலை, மாவட்ட நீதிமன்றம், கே.கே. நகர், அழகர்கோவில் சாலை, கோ. புதூர், நான்கு சித்திரை வீதிகள், நான்கு ஆவணி மூல வீதிகள், நான்கு வெளி வீதிகள், கீழவாசல், தெப்பக்குளம், பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் இரவு 9 மணி வரை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
இதைத் தவிர, மதுரை புறநகர்ப் பகுதிகளான யா. ஒத்தக்கடை, மேலூர், வல்லாளப்பட்டி, கிடா ரிப்பட்டி, கீழவளவு, மேலவளவு, சிலைமான், புளியங்குளம், கருப்பாயூரணி போன்ற பகுதிகளிலும் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
இந்தமழையால்வெப்பம்தணிந்து குளிர்ச்சியானகால நிலை நிலவிய தால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை காரணமாக எஸ். எஸ். காலனி, அரசரடி பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.