கோவையில் தொடங்கியது இந்தியாவின் முதல் ஏலத்துடன் கூடிய பாரா கிரிக்கெட் லீக் 15 மாநிலங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
இந்தியாவில் முதன்முறையாக ஏல முறையுடன் நடத்தப்படும் பாரா கிரிக்கெட் லீக் போட்டியான இந்திய பாரா கிரிக்கெட் லீக் 3.0, கோவை சரவணம்பட்டியில் உள்ள 22 யார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் கேலக்ஸி சார்பில் நடைபெறும் இப்போட்டித் தொடரை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக யாழ் ஹோம்ஸ் நிறுவனத்தின் அம்சகுமார் அருண்சாமி கலந்து கொண்டார் இத்தொடரில் நாட்டின் 15 மாநிலங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பாரா கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கின்றனர்.மாற்றுத்திறனாளி வீரர்களின் திறமையை வெளிப்படுத்தவும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் வாய்ப்புகளை உருவாக்கவும் இப்போட்டி தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கோப்பைக்காக தமிழ்நாடு டவுன்டவுன் டைகர்ஸ், கொல்கத்தா தண்டர் வாரியர்ஸ், டெல்லி யூனிகார்ன்ஸ், பெங்களூரு ரேஜிங் சேலஞ்சர்ஸ் என நான்கு அணிகள் களமிறங்குகின்றன.
மூன்று நாட்கள் நடைபெறும் போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த உள்ளனர் இத்தொடரை ஐ.பி.சி.எல். தலைவர் மிதுன், செயலாளர் கணேஷ் பாலாஜி ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் கேலக்ஸி தலைவர் ஜெய கிஷோர் தலைமையில் போட்டிகள் நடைபெறுகின்றன.