கடலூர்: கடலூர் ராஜாம்பாள் நகரில் தூய்மை காவலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, வீடுகளில் இருந்து குப்பைகளை முறையாக சேகரிக்கும் விதம், பொதுமக்களிடையே குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு மற்றும் தூய்மை பணிகளின் செயல்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை காவலர்களிடம் வழங்க வேண்டும் என்றும், நகரின் தூய்மையைப் பாதுகாக்க அனைவரும் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் கிஷன்குமார் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.