கும்பகோணம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களுக்கு ‘நேஷன் மேக்கர்’ விருது வழங்கும் விழா இன்று நடந்தது.

காந்தி பார்க் எதிரில் உள்ள ரோட்டரி கலாச்சார மையத்தில் நடந்த விழாவிற்கு சங்க தலைவர் அட்வகேட் பாலமுருகன் தலைமை தாங்கினார். மண்டல உதவி கவர்னர் பூமா சௌமியநாராயணன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட கல்வி அலுவலர் சுந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணி தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்றார்.கௌரவ விருந்தினர் கிளப் மென்டார் Rtn. S.பாலாஜி பேசுகையில், ரோட்டரி சங்கத்தின் சேவை பணிகளையும், ஆசிரியர்களின் தியாகத்தையும் எடுத்துரைத்தார். ஆசிரியர் பணி தொழில் அல்ல, தவம் என புகழாரம் சூட்டினார்.

*இதையடுத்து ஆசிரியர்களுக்கு சந்தன மாலை, சால்வை அணிவித்து ‘தேசத்தை உருவாக்குபவர்’ விருதுகளை மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரி, கௌரவ விருந்தினர் பாலாஜி, ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.விருது குழு தலைவர் வல்லவராயன் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் சஹாபுதீன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை சிவக்குமார் செய்திருந்தார்.

இதில் நியூ இயர் சேர்மன் துரைராஜ்,கிளப் அட்மின் வெங்கடேசன், பொருளாளர் ராமச்சந்திரன் உட்பட ரோட்டரி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *