” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற கூட்டம் அமைப்பு செயலாளர் வி.எம்.பாண்டியராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். மோசஸ் மங்கள் ராஜ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் எம்.ஜெகதீசன், டாக்டர் பால.கார்த்திகேயன், எஸ்.ஷேக் நபி, சுகுமாரி செளண்டையன், கவிஞர் இரா.ரவி மற்றும் அறம் ஆசிரியர் விருது வாங்கும் ஆசிரியர்கள், ஆசிரியைகள், நகைச்சுவை மன்ற உறுப்பினர்கள், குழந்தைகள் இவர்களோடு திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் கலந்து கொண்டு விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார். அருமையாக நிகழ்ச்சியை எம்.பத்மாவதி தொகுத்து வழங்கினார். விழாவை ஒருங்கிணைப்பாளர் இஸ்மத் ஏற்பாடு செய்தார். முடிவில் சிவசத்யா நன்றி கூறினார். .