C K RAJAN
Cuddalore District Reporter
9488471235
கடலூர், செப். 8: கடலூர் மாநகராட்சி எஸ்.என். சாவடியில் அமைக்கப்பட்டுள்ள யுஐடிஏஐ ஆதார் சேவா கேந்திரா மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் (08.09.2026) திறந்து வைத்தார்.
பொதுமக்கள் ஆதார் தொடர்பான சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெறும் வகையில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆதார் பதிவு, திருத்தம் உள்ளிட்ட பல்வேறு ஆதார் சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பெங்களூரு மண்டல ஆதார் சேவா கேந்திரா மேலாளர் ராகுல் ஜெயந்த், உதவி மேலாளர் வெங்கட் மற்றும் ஆதார் சேவா கேந்திரா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.