அரியலூர்: அரியலூர் மகேஸ்வரி தட்டச்சு நிலையத்தில், கடந்த ஆண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழாவும், இந்த ஆண்டு தட்டச்சுத் தேர்வுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பும் விழாவும் என இருபெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு தொழில்கல்வி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளர் துரைசெல்வராஜ் தலைமை வகித்து, அனைவரையும் வரவேற்று பேசினார்.

தொழில்கல்வி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர், ஆசிரியர் அரியலூர் நல்லப்பன், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும், தொழில்கல்வி ஆசிரியை சாந்தி உள்ளிட்ட பலர் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களுக்கு முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளர் துரைசெல்வராஜ் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

இதில் தட்டச்சு நிலைய மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *