தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம்,

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதையடுத்து, குண்டடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ள விளம்பரப் பலகைகள், போர்டுகள், பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்டவை மறைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குண்டடம் காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனை நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்வதற்காக வீடியோகிராபரும் உடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். மொத்தம் 4 பேர் கொண்ட குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் விதிமுறைகளின்படி, ரூ.49 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்துச் செல்லும்போது, அதற்கான உரிய ஆவணங்கள் மற்றும் ரசீதுகளை வைத்திருக்க வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, குண்டடம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் பணம் எடுத்துச் செல்லும்போது, அதற்கான உரிய ரசீதுகள் மற்றும் ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்றும், தேர்தல் முடியும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *