பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் பிசியோதெரபி துறை சார்பில் உலக பிசியோதெரபி தின விழா மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது…

இந்த ஆண்டின் கருப்பொருளாக “இருதய நோய் மற்றும் பக்கவாதத்தைத் தடுப்பது, மேலாண்மை செய்வது மற்றும் மறுவாழ்வு அளிப்பது” என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதைத் தடுப்பதில் பிசியோதெரபியின் முக்கியத்துவம், நோய் பாதிப்புக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வு சிகிச்சையின் அவசியம் குறித்து நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குறிப்பாக, ஆரம்ப நிலையிலேயே மறுவாழ்வு சிகிச்சை அளிப்பதன் மூலம் உடல் இயக்கத்தை மேம்படுத்துவதுடன், நோயாளிகளின் சுயசார்பையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த முடியும் என வலியுறுத்தப்பட்டது.

புனர்வாழ்வு சிகிச்சை துறை தலைவர் டாக்டர் V. ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற
இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி.மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் டாக்டர் டி.எம். சுப்பா ராவ், தடுப்பு இதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ஜி.ஆர். ராஜேந்திரன், பி.எஸ்.ஜி.மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன், சமூக மருத்துவப் பேராசிரியரும் துணைத் தலைவருமான டாக்டர் சுதா ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் மருத்துவ நிபுணர்கள் பேசுகையில்,இருதய நோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு தடுப்பு நடவடிக்கைகள், சரியான நேரத்தில் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் திட்டமிட்ட மறுவாழ்வு சிகிச்சை ஆகியவை முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்..

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி.மருத்துவமனையின் பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *