தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் பெல்லம்பட்டி குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் பெண்கள் போராட்டம்.

குண்டடம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் பெல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக காவிரி குடிநீர் சீராக வழங்கப்படாததை கண்டித்து, கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் நிலையில், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து குண்டடம் வட்டார ஊராட்சி வளர்ச்சி வட்டார அலுவலர் சார்பாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் மற்றும் குண்டடம் காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராமங்களில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில், வரும் ஓரிரு நாட்களில் பெல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு காவிரி குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மழையின்மை காரணமாக அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. மேலும், ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரும் போதுமான அளவில் கிடைக்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *