தென்காசி மாவட்டத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் (ECRC) திறப்பு விழா 08.09.2026 அன்று காலை 09.30 மணிக்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்கப்பட்டது.
ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை அளித்து மீண்டும் சமுதாயத்தில் இணைத்து வைக்கும் பொருட்டு தேசிய சுகாதார குழுமம் தமிழ்நாடு வழிகாட்டுதலின் படி தென்காசி மாவட்ட இணை இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையுடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களான பேனியன் மற்றும் அமர்சேவா சங்கம் செயல்பட அவசர கால சிகிச்சை மற்றும் மீள் மையம் 08.09.2026 அன்று துவங்கி வைக்கப்பட்டது.
இம்மையத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையின் ஒத்துழைப்புடன் மீட்டு அவர்களுக்கு, முதலுதவி சிகிச்சை அளித்து, கனிவாக கவனித்து புதிய உடை மற்றும் சுகாதாரமான, சத்தான உணவு வழங்கி, சுய பராமரிப்பு பேணுதலில் கவனம் செலுத்தி, ஊக்கப்படுத்தி,அவர்களுக்கு உடல்நல/மனநல மருத்துவ சிகிச்சை அளித்து, பொழுது போக்கு அம்சங்கள் TV. Radio ஏற்படுத்தி, மனதை ஒருங்கிணைக்கும் யோகா பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கையில் (Badmiton/carom/chess)ஈடுபட ஊக்கமும் உற்சாகமும் அளித்து, கைவினை பொருட்கள் தயாரிக்கும் கலைகளை கற்றுக்கொடுத்து, அவர்கள் குணமடைந்து, குடம்பத்தினருடன் இணைந்த பிறகும், சுயமாக வருவாய் ஈட்டி, தன் சொந்த முயற்சியில் சமுதாயத்தில், சக மனிதர்களைப் போல, சுயமரியாதையுடன் வாழும் அளவிற்கு அவர்களுக்கு, சமூக திறன்கள் பயிற்சி (Social Skill Training), வாழ்க்கை திறன் பயிற்சி (Life skill Training) கற்றுக்கொடுக்க இம்மையம் வழிவகை செய்யும் பொருட்டு துவங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் மரு.பிரேமலதா, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் மரு.செல்வபாலா, மாவட்ட மனநல மருத்துவர்-மரு.நிர்மல், வெளிப்புற மனநல மருத்துவர்(Satellite Psychiatrist)மரு.முகமது இப்ராகிம், Banyan துணை இயக்குநர் செல்வி.கீர்த்தனா, அமர்சேவா சங்க ஒருங்கிணைப்பாளர் நவமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.