கும்பகோணம், :
ஜே.சி.ஐ. கும்பகோணம் மகாமகம் சிட்டி சார்பில் வார விழாவை முன்னிட்டு முதல் நாளான இன்று நிலையான பருகும் தினம் (Sustainable Sipping Day) நிகழ்ச்சி கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கிலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும் கும்பகோணம் பகுதியில் பணியாற்றும் 222 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மறுபயன்பாட்டு குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ. மண்டலத் தலைவர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பாட்டில்களை வழங்கினார். உடன் முன்னாள் தலைவர் பிரசாத், தலைவர் அருண்பிரகாஷ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், பொருளாளர் மோதிஸ்வரன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பிரிட்டோ, சந்தீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.