அரியலூர் லயன் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் அரியலூர் சிமெண்ட் சிட்டி லயன் சங்கம் கோவை சங்கரா மருத்துவமனை அரியலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவைகள் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் சிறப்பாக நடந்தது எருத்துக்காரன்பட்டி ஊராட்சி அண்ணா நகரில் நடந்த இந்த முகாமிற்கு வருகை தந்த அனைவரையும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவா (எ) பரமசிவம் வரவேற்று பேசினார்

அரிமா சங்கத் தலைவர் ஜெ சஞ்சய்காந்தி முகாமிற்கு தலைமை தாங்கினார் செயலாளர் ஆர் ராம்குமார் பொருளாளர் விஅழகரசு முன்னாள் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் லயன் சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் தங்கசுகுமார் சக்கரவர்த்தி பூமிநாதன் தண்டபாணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர்கள் ரித்து மற்றும் மேகா ஆகியோர் நோயாளிகளுக்கு கண் பரிசோதனை செய்தார்கள் சிகிச்சை அளித்தார்கள் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டோர் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *