எப்போது தோ்தல் வந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக மீண்டும் கைப்பற்றும் தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.
தூத்துக்குடி திமுக அமைப்புகளை மறுசீரமைப்பு குறித்து இராமநாதபுரம் மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சா் சத்தியமூர்த்தி தலைமையில் பரமக்குடி கேகே மஹாலில் நடைபெற்றது. தலைமை கழக பிரதிநிதிகளாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி கலந்து கொண்டு பேசுகையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க இந்த கூட்டம் நடைபெறுகிறது. திமுக கட்சி 76 ஆண்டுகள் நடைமுறையில் நாட்டுமக்களுக்காக பணியாற்றி வருகின்ற மிகப்பொிய கட்சி தலைவராக நம்முடைய தலைவர் ஸ்டாலின் இருந்து வருகிறாா். திமுக வின் வரலாறு தொியாமல் பலா் பேசி வருகின்றனா்.
தற்போது தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சியை எல்லோரும் வெறுக்கின்ற அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. காரணம் சொல்வது ஓன்றும் செய்வது ஓன்றுமாக இருக்கிறது. 120 நாட்கள் ஆட்சியில் 300க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக கொலை கொள்ளை பாலியல் என அதிகம் நடைபெற்றுள்ளது. அதிலும் விஜய் கட்சியை சோ்ந்த எம்.எல்.ஏ உள்பட நிா்வாகிகள் பலா் பல்வேறு வகையான முறைகேடு செயல்களில் ஈடுபட்டுள்ளனா். இதையெல்லாம் என்னவென்று கேட்பதற்கு அந்த கட்சியின் முதல்வருக்கு தொிந்து நடக்கிறதா அல்லது மறைக்கப்படுகிறதா என்ற கேள்வி இருந்து வருகிறது.
திமுக ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல்ஆட்சியில் யாரையும் ஓதுக்கி விடாமல் தமிழகத்தில் ஆட்சி செய்த தளபதியாா் ஆட்சியின் காலம் தான் தமிழகத்தின் பொற்காலம் இதை தற்போது பலரும் உணா்ந்து திமுக விற்கு வாக்களிக்காமல் நாம் விட்டது தவறு என்று உணரும் நிலை வந்துள்ளது.
திமுக தலைமை எடுக்கின்ற முடிவிற்கும் அறிவிக்கின்ற போராட்டத்திற்கும் நாம் எப்போதும் கள போராளியாக இருந்து செயல்பட வேண்டும் அடுத்து வர இருக்கின்ற உள்ளாட்சி தோ்தலில் இராமநாதபுர மாவட்டத்தில் அனைத்து பொறுப்புகளுக்கும் நம் தலைவா் அறிவிக்கின்ற வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் அதே போல் இந்த மாவட்டத்தில் எப்போது தோ்தல் வந்தாலும் நான்கு தொகுதிகளிலும் மீண்டும் திமுக அமோக வெற்றி பெறும் அனைத்து தரப்பினரும் நம் பக்கம் தான் இருக்கிறாா்கள். இதை நம் கட்சிகாரா்கள் பயன்படுத்திக்கொண்டு தளபதியாருக்கு வலுசோ்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும். என்று பேசினாா்.
கூட்டத்தில் மாநில மகளிா் அணி செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ஹெலன் டேவிட்சன், மாவட்ட செயலாளர் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன் எம்.எல்.ஏ, கதிரவன் எம்.எல்.ஏ முன்னாள் எம்.பிக்கள் அன்வா்ராஜா பவாணி ராஜேந்திரன் மாநில இலக்கிய அணி துணைச்செயலாளர் பெருநாழிபோஸ் மாநில நிா்வாகிகள் மாவட்ட அணி நிா்வாகிகள் ஓன்றிய பகுதி செயலாளா்கள் மற்றும் பல்வேறு அணிகளின் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.