லயன்ஸ் சங்கத்தின் பாரம்பரியத்தையும், ஒழுங்கையும், தலைமைத்துவத்தையும் சிறப்பிக்கும் வகையில் லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்க பேனர், பெல் மற்றும் கேவல் வழங்கும் விழாதிருச்சி என்டிஆர் ஜாய் விஸ்டா ரிசார்ட் வளாகத்தில்நடைபெற்றது.மாவட்ட ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேல் லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ்
சங்கத்தின் அடையாளமாக உள்ள பேனர்,

கூட்டத்தை முறையாக நடத்துவதற்கான அடையாளமாக பெல், தலைமைப் பொறுப்பையும் ஒழுங்கையும் குறிக்கும் கேவல் ஆகியவற்றை திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ் சங்க சாசன தலைவர் ஹேமலதா, சாசன செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோரிடம் வழங்கினார்.இவை சங்கத்தின் ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் சேவைப் பணிகளை நினைவூட்டும் முக்கிய அடையாளங்களாக திகழ்கின்றன.மாவட்ட முதல் துணை ஆளுநர் ஸ்டாலின், மாவட்ட உறுப்பினர் வளர்ச்சித் தலைவர் ரவி,இ வேஸ்ட் கலெக்க்ஷன் மாவட்ட தலைவர் மகேந்திரன், மாவட்ட அவை செயலர் சசிதரன், மாவட்ட அவை பொருளாளர் எழிலரசி ரவி, இ செகரட்டரி சரவணபெருமாள், கலை சமூக செயல்பாடு தலைவர் ரவிச்சந்திரன், இலக்கு ஊக்குநர் சரவணக்குமார், விரிவாக்க தலைவர் செந்தில்குமார் உட்பட லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *