காரைக்கால்,செப்.10-காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் வணிகவியல் சங்கம் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் புதுச்சேரி பல்கலைக்கழக காரைக்கால் மையத்தின் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் வி.அருள்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வணிகவியல் சங்கத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்க கல்லூரி முதல்வர் முனைவர் முகமது ஆசாத் ராசா தலைமையேற்க, வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் மதன் மோகன் காந்தி முன்னிலை வகித்தார். சங்க ஒருங்கிணைப்பாளர்முனைவர் பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.
வணிகவியல் துறை மாணவர்களின் கல்வி, தொழில்முறை அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு சங்கத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்