காரைக்கால், செப்.10-வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையையொட்டி காரைக்கால் மாவட்டம், கோட்டுச் சேரிகொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடையின்றி வெளியேறும் வகையில் திருவேட்டக்குடி காலனி PET பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் தூர்வாரும் பணியை பஞ்சாயத்து ஆணையர் முத்துக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
வடிகால்களில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இதர கழிவுப் பொருட்களை கொட்டாமல் வடிகால்கள் மற்றும் மழைநீர் வழிந்தோடும் பாதைகளை சுத்தமாகவும், தடையின்றியும் வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
_
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்