துறையூர் செப்-10
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீழநடுவலூரில் கடந்த 15 நாட்களுக்கு மேல் குடிதண்ணீர் வராததால் பொதுமக்கள் 09/09/2026 அன்று காலை 10 மணி அளவில் ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
.ஊராட்சி செயலர் சந்திரசேகர் தண்ணீர் வழங்குவற்கான பணிகள் நடந்து வருகிறது என்று கூறினார்.கடந்த 15நாட்களாக தண்ணீர் இல்லாமல் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள், முதியவர்கள் கஷ்டப்படுகிறார்கள்,ஆனால் இதே பதில் தான் கூறுகிறீர்கள் என்று பொது மக்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமார் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.கொழுத்தும் வெயில் மற்றும் மழை பெய்யாததால் பழைய போர்வெல்லில் தண்ணீர் கீழே சென்று விட்டதால் அதற்கு மாற்றாக வேறொரு போர்வெல்லில் இருந்து தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்