உள்ளூர் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் – தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்:

மதுராந்தகம் தனி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மதுராந்தகம் நகர மகளிர் அணி செயலாளரும், நகரமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான தேவி வரலட்சுமி கோபிநாதன், அ.தி.மு.க. கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து ஆசி பெற்று, தனது விருப்ப மனுவை வழங்கினார்.

மதுராந்தகம் தொகுதியில் கட்சிப் பணிகளிலும், பொதுமக்கள் நலப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தேவி வரலட்சுமி கோபிநாதனுக்கு, அ.தி.மு.க. சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என கட்சியினரும், தொகுதி மக்களும் எதிர்பார்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுராந்தகம் தொகுதிக்கு வெளியூரைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்துவதற்குப் பதிலாக, தொகுதியின் பிரச்சினைகள் மற்றும் மக்களின் தேவைகளை நன்கு அறிந்த உள்ளூர் உறுப்பினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மக்களுடன் தொடர்ந்து களத்தில் இருந்து பணியாற்றி வரும் உள்ளூர் நிர்வாகிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், தொகுதி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுடன், கட்சியின் வெற்றிக்கும் அது வலுசேர்க்கும் என அ.தி.மு.க.வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *