பொள்ளாச்சி,
செப். 10, 2026:க்ளெனிங்கல்ஸ் ஹாஸ்பிடல், ஃபோர்டிஸ் நெட்வொர்க்கின் ஒரு அங்கமாக, பொள்ளாச்சியில் புதிய தீவிர நுரையீரல் செயலிழப்பு சிகிச்சை மையத்தை தொடங்கியுள்ளது.
பொள்ளாச்சி பிரபு பல்நோக்கு மருத்துவமனையில், எண் 95, நியூ ஸ்கீம் சாலை,
என்ற முகவரியில் இந்த புதிய சிகிச்சை மையம் இன்று தொடங்கப்பட்டது.
மையத்தின் தொடக்க நிகழ்ச்சியில், பொள்ளாச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. K. நித்யானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மையத்தை தொடங்கி வைத்தார்.
மேலும், மூத்த மருத்துவர்கள் Dr. Govini Balasubramani, MS, MCh, FIACS, இதயம் மற்றும் இரத்தக்குழாய் அறுவை சிகிச்சை, இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர், Dr. Vimi Varghese, MBBS, MD, நுரையீரல் மருத்துவம், செயல்முறை சார்ந்த நுரையீரல் மருத்துவம் மற்றும் தூக்க மருத்துவ நிபுணர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரபு சிறப்பு மருத்துவமனை சார்பில் Dr. ஜி. ஞானசுந்தர், MD – மயக்கவியல் மற்றும் Dr. சுபாஷ் இம்மானுவேல், MD – நுரையீரல் மருத்துவ ஆலோசகர் உள்ளிட்ட மருத்துவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பிறந்த குழந்தைகளில் காணப்படும் மரபணு சார்ந்த நுரையீரல் கோளாறுகள் முதல், வயது வந்தோருக்கான சிக்கலான நுரையீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வரையிலான பல்வேறு சிகிச்சைகளுக்கு இந்த மையம் மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை சேவைகளை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நுரையீரல் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நவீன மருத்துவ முறைகள் மூலம் மதிப்பீடு செய்து சிகிச்சை அளிப்பதற்கான உயர் திறன் கொண்ட மையமாக இது செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் நுரையீரல் தொடர்பான சிகிச்சை தேவைப்படும் மக்களுக்கும் இந்த புதிய மையம் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சியில் நவீன நுரையீரல் சிகிச்சைக்கான புதிய மருத்துவ மையம் தொடங்கப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் முக்கிய மருத்துவ முன்னேற்றமாக அமைந்துள்ளது.