கல்பாக்கம் செப் 12
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் பெரும்பேர் கண்டிகையில் உள்ள முதியோர் இல்லம், மதுராந்தகம் ஒன்றியம் வில்வராயநல்லூர் முதியோர் இல்லம், தாம்பரம் அடுத்த மேடவாக்கம் ரஜினிகாந்த்து முதியோர் இல்லம் மற்றும் சேலையூர் பகுதி சாந்தி வனம் ஆகிய 4 முதியோர் இல்லங்களில் செங்கல்பட்டு மாவட்ட அரசு சமூக நலத்துறை மற்றும் இனாட்டா பௌண்டேஷன் தொண்டு நிறுவனம் இணைந்து மூத்த குடிமக்களை மகிழ்வித்து மகிழ் என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தின இதில் முதியோர் இல்லங்களில் தங்கியிருக்கும் இருபாலாரும் ஆடல் பாடல், கதை விடுகதை,பழமொழி என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்
இந்த நிகழ்ச்சியின் போது இனாட்டா பௌண்டேஷன் சார்பில் பொம்மலாட்டம், குத்தாட்டம் , கையுறை பொம்மை மற்றும் கம்பி பொம்மைகள் பயன்படுத்தி முதியோர்களுக்கு நடித்துக் காட்டியும் ஆடல் பாடல் மூலமாகவும் உற்சாகமாக்கி சந்தோசத்தில் மூழ்கடித்தனர்.பின்னர் மாவட்ட சமூகநலத்துறை சார்பில் அவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அவர்களே பராமரித்து வளர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.இதில் தமிழன்னை பொம்மலாட்டம் கலைக்குழு கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.