அரியலூரில் திராவிட கழகம் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே திராவிடர் கழகம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் விடுதலை நீலமேகம் தலைமை தாங்கினார்
மாவட்ட செயலாளர் மு கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார் திராவிட கழகம் தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனை செல்வன் ஆர்ப்பாட்டத்தில் விளக்க உரையாற்றினார்
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நீக்கிடும் ஒன்றிய அரசின் சூழ்ச்சியை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கி அவர் பேசினார் அரியலூர் ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து ஒன்றிய செயலாளர் செந்தில் தமிழ் களம் அரங்கநாடன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் நிர்வாகிகள் மணிவண்ணன் அறிவன் திலீபன் சங்கர் மதியழகன் இளவரசன் திராவிட செல்வன் இளவழகன் முத்தமிழ் செல்வன் செந்தில் பெரியார் செல்வன் தியாக முருகன் சுப்புராயன், கருப்புசாமி கீழப்பழுவூர் அன்பரசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள் மாவட்ட இளைஞரணி செயலாளர் மதியழகன் அனைவருக்கும் நன்றி கூறினார் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது