நாச்சியார் கோவில் லயன்ஸ் சங்கம்,கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன்
இணைந்து நடத்திய சிட்டி யூனியன் வங்கி நிதி உதவியுடன் இலவச கண் சிகிச்சை முகாம் நாச்சியார்கோவில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது..
முகாமை சங்கத் தலைவர்
லயன் பாலமுருகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.மண்டல தலைவர் லயன் மோகன் வட்டாரத் தலைவர் லயன் தங்கவேல் பொருளாளர் லயன் அய்யப்பன்,மற்றும் மாவட்ட தலைவர்கள்,முன்னாள் தலைவர்கள்,உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை செய்தார்கள்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்று பொது மக்களின் கண்களை பரிசோதித்தனா். நகரப்புற ,கிராமப்புற பொது மக்கள் என 196 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 53 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு தஞ்சாவூர் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அவா்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து பேருந்து கட்டணம் உள்ளிட்டவை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டன..ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்ட 46 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப் பட்டது
முகாம் ஏற்பாடுகளை சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.