தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர், செப்- 13. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- வங்கிகளில் பிரச்சினைகள் தீராத காரணத்தினால் கடந்த 11-ந் தேதி 8 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஒரு நாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டோம்.

வங்கிகளில் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, வியாபாரம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் வேலைப்பளு கூடுதலாக இருக்கிறது. அதற்கு தகுந்த போல் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. வங்கிகள் தற்பொது மாதத்தில் 2-சனிக்கிழமைகள் விடுமுறையும், 2-சனிக்கிழமைகள் செயல்படுகின்றன. இதை மாற்றி 4 சனிக்கிழமைகளும் விடுமுறை வேண்டும் என்று கேட்கிறோம். அப்படியென்றால் வாடிக்கையாளர் சேவை நேரத்தை மற்ற நாட்களில் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு சொன்னது. அதை ஏற்றுக்கொண்டு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரைக்கும் கூடுதலாக 40 நிமிடம் வாடிக்கையாளர் சேவையை அதிகரிக்க ஒத்து கொண்டுள்ளோம்.

அதன்படி ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தியுளோம். ஆனால் மத்திய அரசு அதை ஏற்று கொள்ளாமல் நிலுவையில் வைத்துள்ளது. அதை அமல்படுத்த வேண்டும் என பல நாட்களாக நாங்கள் கேட்டு வருகிறோம். ஆனால் மத்திய அரசு கவனிக்கிறோம் என்று சொல்கிறார்களே ஒழிய, அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக ஊழியர்கள் பல நெருக்கடியில் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயம் செய்ய வேண்டும் என்ற திட்டம் மத்திய அரசுக்கு இருக்கிறது. தனியார்மயம் செய்ய வேண்டும் என்றால் பொதுத்துறை மீது மக்களுக்கு ஒரு அதிருப்தி ஏற்பட வேண்டும். இதனால் நியாயமான கோரிக்கைகளை ஏற்று கொள்ளாமல் ஊழியர்களை இப்படி போராட்டத்தில் தள்ளிவிடுவதன் காரணமாக போராட்டம் ஏற்படும் பொழுது, பொதுமக்களும் தவறதலாக நினைக்கலாம். பொதுத்துறையில இது மாதிரி அடிக்கடி போராட்டம் நடக்கிறது. எனவே தனியார் வங்கிகளுக்கு சென்று விடலாம் அல்லது வங்கியையே தனியார்மயம் செய்து விடலாம் என்று மக்களை தூண்டிவிடக்கூடிய ஒரு சதி திட்டமாக கூட இதனை நாங்க பார்க்கிறோம்.


2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவதிலும் சுணக்கம் காட்டுகிறது. மத்திய அரசு திட்டமிட்டு பொதுத்துறை வங்கிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றது. அதை நாங்கள் எதிர்த்து தொடர்ந்து போராடிவருகிறோம். மக்களுக்கு கூடுதலாக சேவை செய்ய அதிகம் கிளைகளை திறக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். ஆனால் தனியார் வங்கிகளுக்கு நிறைய கிளைகள் தொடங்குவதற்கு அனுமதி கொடுத்து அரசு வங்கிகள் இருக்கக்கூடிய கிளைகளை குறைக்கிறார்கள். மக்களுக்காக நாங்க போராடிக் கொண்டிருக்கிறோம்.

பொதுத்துறை வங்கிகளில் ரூ.245 லட்சம் கோடி சேமிப்பு இருக்கிறது. அதற்கு பாதுகாப்பு பொதுத்துறை வங்கிகள் தான், மக்களும் எங்களுடைய இந்த கோரிக்கைகளையும், பிரச்சினைகளையும் புரிந்து கொண்டு எங்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மத்தியஅரசு இன்னும் எங்களுடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் வருகிற 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்து இருக்கிறோம்.

22-ந் தேதி தொழிலாளர் நல ஆணையர் முன்பு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதில நிச்சயமாக நாங்கள் பங்குபெறுவோம். பேச்சுவார்த்தை மூலமாக பேசி முடிப்பது தான் எங்களுடைய திட்டம். ஆனால் மத்தியஅரசின் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான சுமுக முடிவும் எடுக்கவில்லை என்றால் 3 நாட்கள் வேலை நிறுத்தம் நடக்கும்.

அதன்பின்னரும் நிர்வாகமும், அரசும் எங்கள் பிரச்சினையை தீர்க்கவில்லை என்றால் அக்டோபர் மாதம் 26-ந் தேதியில் இருந்து காலவரையறை இல்லாத ஒரு வேலை நிறுத்தத்திற்கு நாங்கள் தயார் செய்து கொண்டிருக்கிறோம். எனவே மத்தியஅரசு வங்கித்துறையினுடைய நெருக்கடியை புரிந்து பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக முடிக்க வேண்டும் என்று கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *