துறையூர் செப்-14
திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில்
மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ 75லட்சம் இழப்பீட்டு தொகையை சார்பு நீதிபதி விஜய் கார்த்திக் வழங்கினார்.
மாண்புமிகு உச்ச நீதிமன்றம் புதுடெல்லி தேசிய மக்கள் நீதிமன்றம் உத்தரவின்படி தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் படியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் ஆலோசனைப்படி 12. 09. 2026 அன்று காலை10. 30 மணி அளவில் துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமாகிய விஜய் கார்த்திக் அவர்களின் தலைமையில் துறையூர் சார்பு நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அதில் துறையூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி/குற்றவியல் நீதிமன்ற (பொறுப்பு ) நீதிபதி அன்பு, முன்னிலையில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து சமரசமாக பேசப்பட்டது.சுமார் 500 வழக்குகளுக்கு மேல் கோப்பிற்கு எடுக்கப்பட்டு 246 வழக்குகளும், வங்கி வாராக் கடன்கள் 52 வழக்குகளும் சமரசமாக முடிக்கப்பட்டது. மொத்தமுள்ள 298 வழக்குகளின் தீர்வு தொகையாக ரூபாய் 3,14,92,635 தீர்வு காணப்பட்டது.
குறிப்பாக அம்மம்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன்(32) என்பவருக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மோட்டார் வாகன விபத்தில் அவரது வலது கால் முழுவதும் சேதமடைந்தது.இது தொடர்பாக துறையூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் துறையூர் மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் முறையில் தீர்வு காணப்பட்டு கோ டிஜிட் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து 75 லட்ச ரூபாய்க்கான காசோலை இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது.
இதில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துக்குமார், செயலாளர் செல்லதுரை, பொருளாளர், சசிகுமார் மற்றும் துறையூர் கூடுதல் வழக்கறிஞர் தனசேகரன், செல்லதுரை,விவேக் ராஜா, கம்பெனி வழக்கறிஞர் நாகராஜ் மற்றும் விவேக் ,பாபு மற்றும் ஏராளமான வழக்காடிகளும் கலந்து கொண்டு வழக்குகளை சமரச முறையில் நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்ட சட்ட பணிகள் குழுவின் அலுவலர் செய்திருந்தார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்