துறையூர் செப்-13
திருச்சி மாவட்டம்
துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் 11-09-2026 அன்று மாலை 6 மணியளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற்ப்படுத்தோருக்கான இட ஒதுக்கீட்டில் சாதியை நீக்கிட சூழ்ச்சி செய்யும் ஒன்றிய பாஜக மோடி அரசைக் கண்டித்து மாவட்ட தலைவர் ச.மணிவண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் மகாமுனி வரவேற்புரை ஆற்றினார். தொடக்க உரையை மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ. சண்முகம் வழங்கினார்.தொடர்ந்து பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவிற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் செ. செந்தில் குமார்,மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சு. சரண் ராஜ், உப்பிலியபுரம் ஒன்றிய தலைவர் மாராடி எம். ஏ. இரமேஷ், உப்பிலியபுரம் நகர தலைவர் பெ. கண்ணதாசன், பொதுக்குழு உறுப்பினர் இரா. நந்தகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் சே. விஷ்ணு வர்தன்,மாவட்ட இளைஞரணி லோகநாதன், துறையூர் ஒன்றிய தலைவர் இர.வரதராஜன்,மிலிட்டரி மணி, கோர்ட் சந்திரபோஸ், நகர இளைஞரணி நா. குணராஜன்,கோணபாதை பாண்டியன்,இந்திய கம்யூனிஸ்ட் விஏஒ.செல்வம்,சேவுகன்.மாணவரணி ம.இனியன்சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் மாவட்ட செயலாளர் ஜெ.தினேஷ் பாபு நன்றி கூறினார்.
துறையூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *