கோவை சூலூர் அருகே உள்ள மெட்ரோ கிளப் ரிசார்ட்டில், ஆனமலைஸ் டொயோட்டா சார்பில் 9-ஆம் தலைமுறை “ஆல் நியூ டொயோட்டா ஹைலக்ஸ்” வாகனத்தின் அறிமுக விழா நடைபெற்றது.

இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், நிதி நிறுவனங்களின் பங்குதாரர்கள், விற்பனையாளர்கள் மற்றும் ஆனமலைஸ் டொயோட்டா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் புதிய தலைமுறை ஹைலக்ஸ் வாகனம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், டொயோட்டாவின் பல்வேறு மாடல் வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

தொடர்ந்து, புதிய ஹைலக்ஸ் வாகனத்தின் திறன்களை வாடிக்கையாளர்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆஃப்-ரோடு பாதை அமைக்கப்பட்டிருந்தது.

இதில் வாடிக்கையாளர்கள் ஹைலக்ஸ் வாகனத்தை தாங்களே ஓட்டி, கரடுமுரடான பாதைகள் மற்றும் சவாலான நிலப்பரப்புகளில் அதன் செயல்திறன், வலிமை மற்றும் கட்டுப்பாட்டை நேரடியாக அனுபவித்தனர்.

கடந்த 5 தசாப்தங்களாக உலகளவில் ஆஃப்-ரோடு திறன், உறுதித்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்ற டொயோட்டா ஹைலக்ஸ், கடினமான சாலைகள் மற்றும் சவாலான பயணங்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

புதிய தலைமுறை ஹைலக்ஸ் அறிமுகத்தின் மூலம், அதன் சிறப்பான ஆஃப்-ரோடு திறனை வாடிக்கையாளர்கள் நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பையும் ஆனமலைஸ் டொயோட்டா ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *