கும்பகோணம் மாதளம்பேட்டை, ஆதி லட்சுமி நகரில் அமைந்துள்ள சிற்பி விஜயன் ஸ்தபதி இல்லத்தில் உள்ள ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடைபெற்றன.

இதில் ஸ்ரீ விஜய கணபதிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 9 வகை திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.இந்நிகழ்வில் திருவாசக அன்பர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *