மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பில் 6,500 போலீசார் ஈடு பட இருப்ப தாகவும், ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடப்பதாக மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷே கம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பிரமாண்டமாக நடக்க இருக்கிறது.
இந்தநிலையில், கோவில் கிழக்கு கோபுரம் அருகே உள்ள புது மண்டபபகுதியில் காவல்துறை சார்பில் மாநகர கட்டுப்பாட்டு அறை அமைத்து குற்றச்செயல்கள் நடக்காதவண்ணம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன
இதனை ஆய்வு செய்த மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் கூறியதாவது:- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக, மாநிலம் முழுவதும் இருந்து குற்றத்தடுப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோவிலின் உள்பகுதியில் 171 அதிநவீன தொழில்நுட் பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவில் வெளிவளாகங்களில் 270-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் கைகளிலும் கையடக்க,
கண்காணிப்பு கேமராக்களும் வழங்கப்பட்டுள்ளன. கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து வீதிகளிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள் ளது. கும்பாபிஷேகத்தன்று, காலை 10 மணி வரை சித்திரை வீதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. காரணம் பாஸ் வைத்திருப்பவர்கள் 10 ஆயிரம் பேர் வரையும், கோவில் பணியாளர்கள் 3 ஆயிரம் பேர் வரையும் வந்து செல்வார்கள். இதுவே சித்திரை வீதிக்கு போதுமானதாக இருக்கும். எனவே, அவர்கள் வெளியேறிய பிறகு, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். வாகனங்களை நிறுத்துவதற்கும், தனித்தனியாக இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முக்கியஸ்தர்கள் வந்து செல்ல பாஸ் வழங்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளது. கோவிலை சுற்றிலும் டிரோன் மூலமாகவும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணித்து வருகின்றனர். வெளி மாவட் டங்களில் இருந்து உள்ளே வரும் வாகனங்களை நிறுத்துவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. அதேபோன்று பக்தர்கள் கோவிலுக்கு செல்ல 7 வண்ணங்களில் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன் வழியாகதான் கோவிலுக்குள் செல்லமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.