மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் ஊரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

வேலை கேட்டு இரு பிரிவினர் சிபிசிஎல் தொழிற்சாலையில் முன்பு கூடியதால் வாக்குவாதம் போலீசார் சமரசம் பதட்டமான சூழ்நிலை
மணலியில் இயங்கிவரும் மத்திய அரசின் ,சிபிசிஎல் நிறுவனத்தில் கச்சா எண்ணெய் மூலம் பெட்ரோல், டீசல் போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.இந்த உற்பத்தி பணியில் சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த சிபிசிஎல் நிறுவனத்தில் சுமார் ரூ 150 கோடி செலவில் (ஷட் டவுன்) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த சிபிசிஎல் நிறுவனத்தில் மணலி சின்ன சேக்காடு போன்ற உள்ளூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மணலி மக்கள் நல மேம்பாட்டு சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இதில் ஒரு பிரிவினை எங்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இரு தரப்பினரும் நுழைவாயிலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திடீரென சிபிசிஎல் நிறுவன வாசலில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.


இதில் மணலி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வேலை வாய்ப்பு கேட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதை அடுத்து அங்கு வந்த மணலி காவல் உதவி ஆணையர் விவேக் கண்ணன், தலைமையில் வந்த போலீசார் போராட்டம் செய்தவர்களை சமாதானம் செய்தனர். இதனிடையே வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு எதிராக ஒரு குழுவினர் அங்கு கூடியதால்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *