தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கோவையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகக் கூட்டம், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளர் உமர் ஹாஜியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
எதிர்வரும் அக்டோபர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கோவையில் நடைபெற உள்ளது.
இந்த மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுவை சிறப்பாக நடத்துவதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கான பணிகளை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தற்போதைய தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநிலச் செயலாளர் சாகுல் அமீது,
A. சர்புதீன் தமுமுக மாவட்டத் தலைவர்,
K. U. முஜிப் ரஹ்மான் தமுமுக மாவட்டச் செயலாளர்,
A. முஹம்மது இப்ராஹிம் மமக மாவட்டச் செயலாளர்,
அசாருதீன் தமுமுக மாவட்டப் பொருளாளர்,
டி.எம்.எஸ். அப்பாஸ் தமுமுக மாவட்டத் துணைத் தலைவர்,
குனிசை ஷாஜகான் மமக மாவட்டத் துணைச் செயலாளர்,
மு. ஆஷிக் அஹமது மமக மாவட்டத் துணைச் செயலாளர்
ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.