தமிழகத்திலேயே குடிநீர் தட்டுப்பாடு இல்லாத ஒரே இடம் தூத்துக்குடி மாநகராட்சி தான்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மண்டலம் இருபதாவது வார்டு பகுதி சபா கூட்டம் கீதா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் ஆணையர் பிரியங்கா முன்னிலையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 20 வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர் அதன்பிறகு மாநகராட்சி மேயர் ஜெகன் பேசுகையில் தூத்துக்குடி மாநகராட்சி 22 ஆம் ஆண்டு 23 ஆம் ஆண்டு 24 ஆம் ஆண்டு 25 ஆம் ஆண்டு எப்படி இருந்தது தற்போது 26 ஆம் ஆண்டு எப்படி இருக்கிறது மக்களின் தேவைகளை நாம் பூர்த்தி செய்து வருகிறோம்.. பகுதி சபா நோக்கம் எல்லோருக்கும் தெரியும் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் போடப்பட்டுள்ளது.

இருபதாவது வார்டில் சொத்து வரி 93 லட்ச ரூபாய் சொத்து வரி வரவேண்டும் 23 லட்சம் ரூபாய் தான் இதுவரை வசூல் ஆகியுள்ளது 70 லட்சம் பாக்கி உள்ளது. குடிநீர் கட்டண மாநகராட்சிக்கு இருபதாவது வார்டில் வர வேண்டியது 46 லட்ச ரூபாய் வசூல் வர வேண்டியதை 8 லட்ச ரூபாய் தான் வசூல் ஆகியுள்ளது இன்னும் 38 லட்ச ரூபாய் குடிநீர் கட்டணத்தில் மாநகராட்சிக்கு வர வேண்டியது உள்ளது மாநகராட்சிக்கு வருவாய் வருவதற்கு தக்கன தான் சாலைகள் எல்லாம் நாம் அமைக்க முடியும் தற்போது பெங்களூரில் இருந்து வந்தேன் சென்னையில் இருந்து வந்தேன் முன்பு தூத்துக்குடி இப்படி இருந்தது தற்போது தூத்துக்குடி மாநகராட்சி சென்னை மவுண்ட் ரோடு மாதிரி உள்ளது

வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறுகிறார்கள் குடிநீர் நமக்கு அவசியம் சில இடங்களில் குடிநீர் பைப்புக்காக இன்றோடு உடைக்கப்படுகிறது அதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநகராட்சி சார்பில் கடந்த நான்கு வருடமாக போடப்படுகின்ற கான் மீது மூடி போடப்படுகிறது ஆனால் முன்பு இருந்த 21 முதல் 29 வார்டு வரை கழிவுநீர் கான் மீது மூடி இல்லாமல் உள்ளது வருங்காலத்தில் மூடி போடப்படும் அதனால் சுகாதாரம் பாதுகாக்கப்படும் அது போல பக்கில் ஓடை ஏழு கிலோமீட்டர்தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது.

எங்கெங்கு ஆக்கிரமிப்பு இருக்கிறது என்று பார்த்து ஆக்கிரமிப்புஅகற்றப்பட்டு வருகிறது 14 வழித்தடம் தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மடத்தூர் முதல் நாலாம் கேட்டு வரை ரோடு அகலப்படுத்தப்பட்டுள்ளது. டுவிபுரம் ஐந்தாவது தெரு ரோடு அகலப்படுத்தப்பட்டுள்ளது தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி அடைந்து வருகிறது எனது 50 வருட கனவு திட்டம் தான் தூத்துக்குடி எப்படி இருக்க வேண்டும் என்று செய்கிறோம் எண்டு டு எண்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது 18 மீட்டர் ரோடு 12 மீட்டர் ரோடு எல்லாம் அகலப்படுத்தப்பட்டுள்ளது. சுவர்களில் அழகுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் படங்கள் வரையப்படுகிறது நிறைய பூங்காக்கள் உள்ளது மூன்று பூங்காக்கள் இருந்தது தற்போது 53 பூங்காக்கள் உள்ளது

மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறார்கள் சிறிய சிறிய விளையாட்டு மைதானங்கள் பூங்காற்றில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் சில பூங்காக்களை விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தான் ஆனால் தூத்துக்குடி மட்டும் தான் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது ஆற்றின் படுகையில் தண்ணீர் இல்லை பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு தான் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது

மாநகராட்சியில் ஏதாவது ஒரு வார்டு தேர்ந்தெடுத்து 100% சோலார் வார்டு மாற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல மாநகராட்சியில் ஏதாவது வார்டு தேர்ந்தெடுத்து நாலு வகை குப்பைகளை பிரித்து கொடுக்கும் பணிகள் தொடங்கும் 22 ஆம் ஆண்டு முத்து நகர் பூங்கா பல்வேறு வசதிகள் செய்து கொடுத்து நவின வசதிகள் செய்யப்பட்டுள்ளது பூங்காக்களில் விளையாட்டு பயிற்சியாளர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறார்கள்

தற்போது அதற்கு கடும் போட்டி உள்ளது சென்னை சென்று அமைச்சர் வரை பரிந்துரை செய்யப்படுகிறது இரண்டு விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்து வருகிறார்கள் மீண்டும் மீண்டும் நான் சொல்லுகிறேன் தினசரி குடிநீர் வழங்குவது தூத்துக்குடி மாநகராட்சி மட்டும்தான் தூத்துக்குடி மாநகராட்சி வருங்காலத்தில் மேலும் பல வளர்ச்சி அடையும் பல்வேறு தொழிற்சாலைகள் தூத்துக்குடி மாநகரில் வந்து கொண்டிருக்கிறது

அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் சிறிய சிறிய சாலைகள் போடவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து சாலைகளும் போடப்பட்டுவிடும் அடுத்த மாதம் 15 ஆம் தேதி மழை ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது அதன் அடிப்படையில் அதற்கான பணிகள் எல்லாம் தற்போது நடைபெற்று வருகிறது என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பகுதி சபா கூட்டத்தில் பேசினார் நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளர் ரவிந்திரன். பேச்சிமுத்து. பிரபாகர். ஐசக் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *