திருவொற்றியூர்:
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி, சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் 500 பேருக்கு அறுசுவை பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவொற்றியூர் கிழக்கு பகுதி தி.மு.க. அலுவலகமான சன்னதி தெருவில், மண்டலக்குழு தலைவரும், கிழக்கு பகுதி செயலாளருமான தி.மு. தனியரசு ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் கலந்து கொண்டு, கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 500 பேருக்கு அறுசுவை பிரியாணியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன், பகுதி அவைத்தலைவர் ஆசைத்தம்பி, பகுதி நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.